பிரீமியர் லீக்: பிரென்ட்போர்டை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி... ஆர்சனலுக்கு நெருக்கடி

சாம்பியன் பட்டத்திற்கான ரேஸில் ஆர்சனல் அணிக்கு மான்செஸ்டர் சிட்டி கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
பிரீமியர் லீக்: பிரென்ட்போர்டை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி... ஆர்சனலுக்கு நெருக்கடி
Published on

மான்செஸ்டர்,

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், மான்செஸ்டர் சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் பிரெண்ட்ஃபோர்டு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சாம்பியன் பட்டத்திற்கான ரேசில் ஆர்சனல் அணிக்கு மான்செஸ்டர் சிட்டி கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சிட்டி அணி ஆதிக்கம் செலுத்தியது.ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஜெரமி டோகு ஒரு அற்புதமான கோல் அடித்து சிட்டி அணியை முன்னிலை பெறச் செய்தார்.ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருந்தபோது, எர்லிங் ஹாலண்ட் ஒரு கோல் அடித்து முன்னிலையை 2-0 என உயர்த்தினார். இறுதியாக மாற்று வீரராகக் களமிறங்கிய ஓமர் மார்முஷ் (Omar Marmoush) மூன்றாவது கோலை அடித்து சிட்டி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Also Read
ஆர்சிபிக்கு 4 இடம்.. சிஎஸ்கேக்கு ஒன்னு - அஷ்வின் தேர்வு செய்த இந்திய புதிய டி20 அணி
பிரீமியர் லீக்: பிரென்ட்போர்டை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி... ஆர்சனலுக்கு நெருக்கடி

இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ள ஆர்சனல் அணியை நெருங்கியுள்ளது. ஆர்சனல் தனது அடுத்த போட்டியில் வெஸ்ட் ஹாம் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், சிட்டியின் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்வியுற்ற பிரெண்ட்போர்டு அணி தற்போது 8-வது இடத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com