

மாட்ரிட்,
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 5-1 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.வி. ஐந்தோவன் அணியை வீழ்த்தியது.
மாட்ரிட்டில் உள்ள சான்டியாகோ பெர்னாபியூ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் ஆரேலியன் ச்சுவாமேனி செய்த தவறால் பி.எஸ்.வி. அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை அந்த அணியின் இவான் பெரிசிச் அதை கோலாக்கினார். இதனால் முதல் பாதியின் முடிவில் ரியல் மாட்ரிட் 0-1 எனப் பின்தங்கியது
இரண்டாவது பாதியில் ரியல் மாட்ரிட் வீரர்கள் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து கோல்களை அடித்தனர்.
50-வது நிமிடத்தில் பெடெரிகோ வால்வெர்டேவும், 60-வது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாமும் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர்.
தொடர்ந்து, 64-வது நிமிடத்தில் தனது முதல் கோலையும், 84-வது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் எம்பாப்பே அடித்தார். இதையடுத்து, 87-வது நிமிடத்தில் வினீசியஸ் ஜூனியர் அணியின் 5-வது கோலை அடித்தார். இதன்மூலம் ரியல் மாட்ரிட் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி விளையாடிய ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.