லா-லிகா கால்பந்து தொடரில் ரியல் மேட்ரிட் அணி வெற்றி!!

லா-லிகா கால்பந்து தொடரில் ரியல் சோசிடாட் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணி அபாரமாக வீழ்த்தியது.
லா-லிகா கால்பந்து தொடரில் ரியல் மேட்ரிட் அணி வெற்றி!!
Published on

மேட்ரிட்,

லா-லிகா கால்பந்து தொடரில் ரியல் சோசிடாட் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணி அபாரமாக வீழ்த்தியது.

போட்டி தொடங்கிய 10வது நிமிடத்தில் ரியல் சோசிடாட் அணி முதல் கோல் அடித்தது. தொடர்ந்து முதல் பாதியில் 40 மற்றும் 43வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து ரியல் மேட்ரிட் அணி முன்னிலை பெற்றது.

இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ரியல் மேட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதி ஆட்டத்தில் ரியல் மேட்ரிட் அணி வீரர்கள் 76 மற்றும் 79வது நிமிடங்களில் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதன்மூலம் லா லிகா தொடரின் புள்ளிப்பட்டியலில் ரியல் மேட்ரிட் அணி முதல் இடத்துக்கு முன்னேறியது.இந்த சீசனில் 63 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

ரியல் மேட்ரிட் அணி அடுத்த போட்டியில் மல்லோர்கா அணியை செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியில் எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com