லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் வெற்றி

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லா லிகா கால்பந்து தொடரின் 'எல் கிளாசிகோ' இன்று நடைபெற்றது.
Image Tweeted By @realmadriden
Image Tweeted By @realmadriden
Published on

மாட்ரிட்,

2022- 2023 ஆண்டுக்கான லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இன்று நடந்த மிக முக்கிமான போட்டியில் பார்சிலோனா அணியும், ரியல் மாட்ரிட் அணியும் மோதின. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லா லிகா கால்பந்து தொடரின் 'எல் கிளாசிகோ' இன்று நடைபெற்றது.

ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் கரீம் பென்சிமா முதல் கோலை அடித்தார். அவரை தொடர்ந்து அந்த அணியின் பெடெரிகோ 2-வது கோலை அடிக்க (35-வது நிமிடத்தில்) முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்று இருந்தது. பரபரப்பாக நடைபெற்ற 2-வது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com