கடைசி நேரத்தில் கோல் மழை... செல்டா விகோவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் திரில் வெற்றி

ரியல் மாட்ரிட் அணி தொடர்ந்து 9-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ரியல் மாட்ரிட்
Published on: 

ஸ்பெயின்,

லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி, செல்டா விகோ அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

முன்னிலை

லா லிகா கால்பந்து தொடரில் சாண்டியாகோ பெர்னாபியூவில் நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் - செல்டா விகோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 6-வது நிமிடத்திலேயே செல்டா விகோ அணியின் பாப்லோ துரான் கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

இதற்குப் பதிலடி கொடுக்க ரியல் மாட்ரிட் வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்தனர். அப்போது 36-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கிலியன் எம்பாப்பே பயன்படுத்த தவறினார். அவர் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றதால் ரியல் மாட்ரிட்டின் சமன் செய்யும் வாய்ப்பு வீணானது.

இதனால் முதல் பாதி முடிவில் செல்டா விகோ அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

பெல்லிங்ஹாம் கோலால் சமநிலை

இரண்டாவது பாதியில் ரியல் மாட்ரிட் அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. அப்போது 66-வது நிமிடத்தில் பெல்லிங்ஹாம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

ஆட்டம் சமநிலையில் நீடித்த நிலையில், 85-வது நிமிடத்தில் கார்லோஸ் எஸ்பி கோல் அடித்து ரியல் மாட்ரிட்டுக்கு 2-1 என்ற முன்னிலையை பெற்றுத் தந்தார். அதன்பிறகு சமநிலைக்கான கோலை அடிக்க செல்டா விகோ தீவிரமாக முயற்சி செய்தது. இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

9-வது தொடர் வெற்றி

இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் அணி தொடர்ந்து 9-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஒரு கோல் பின்தங்கிய நிலையிலும் மனம் தளராமல் போராடி வெற்றியைப் பெற்ற ரியல் மாட்ரிட் அணி, தனது ரசிகர்களுக்கு உற்சாகமான வெற்றியைப் பரிசளித்துள்ளது.

X