உலகின் சிறந்த கால்பந்து வீரராக லெவாண்டவ்ஸ்கி தேர்வு..!!

உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான போட்டியில், லயோனல் மெஸ்சியை ஓரங்கட்டி லெவாண்டவ்ஸ்கி தேர்வானார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரராக லெவாண்டவ்ஸ்கி தேர்வு..!!
Published on

ஷூரிச்,

சர்வதேச கால்பந்தில் 2021-ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்டோருக்கான விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் இரவு சுவிட்சர்லாந்தில் நடந்தது.

இதில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை போலந்து வீரரும், பேயர்ன் முனிச் கிளப்புக்காக விளையாடுபவருமான ராபர்ட் லெவாண்டவ்ஸ்கி தட்டிச் சென்றார். இதற்கான போட்டியில் இருந்த லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), முகமது சலா (எகிப்து) ஆகியோரை வாக்கெடுப்பு அடிப்படையில் ஓரங்கட்டி தொடர்ந்து 2-வது முறையாக இந்த கவுரவத்தை பெற்றார்.

33 வயதான லெவாண்டவ்ஸ்கி, ஜெர்மனியில் பிரபலமான பண்டேஸ்லிகா கால்பந்து தொடரில் 2020-21-ம் சீசனில் பேயர்ன் முனிச் அணிக்காக 41 கோல்கள் அடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. பார்சிலோனா கிளப்பின் கேப்டனான அலெக்சியா புடெல்லாஸ் (ஸ்பெயின்) சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை வசப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com