ரொனால்டோவின் 987-வது கோல்... அல்-நாசர் அசத்தல் வெற்றி

ரியாத்தில் உள்ள சொந்த மைதானத்தில் அல்-நாசர் அணி இந்த ஆட்டத்தில் களமிறங்கியது.
ரொனால்டோ
Published on: 

ரியாத் ,

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் உயர்மட்ட சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் அல்-சாத் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் அல்-நாசர் அணி வீழ்த்தியது.

முன்னிலை

ரியாத்தில் உள்ள சொந்த மைதானத்தில் அல்-நாசர் அணி இந்த ஆட்டத்தில் களமிறங்கியது. அப்போது ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கோலாக மாற்றினார். இதனால் ஆட்டத்தின் துவக்கத்திலேயே அல்-நாசர் அணி முன்னிலை பெற்றது.

இந்த கோல் ரொனால்டோவின் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 987-வது கோலாக பதிவானது.

வெற்றியை உறுதி செய்த பெலிக்ஸ்

தொடர்ந்து ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் முகமது வாத் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார். இதனால் முதல் பாதி 1-1 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

இரண்டாவது பாதியில், 52-வது நிமிடத்தில் ஜோவோ பெலிக்ஸ் பைசைக்கிள் கிக் முறையில் அபாரமாக கோல் அடித்தார். இதன்மூலம் அல்-நாசர் அணி 2-1 என முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்தது.

X