

மாலே,
8-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்டோர்) போட்டி மாலத்தீவுவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 7 அணிகள் பங்கேற்றுள்ளன.
‘ஏ’ பிரிவில் நேபாளம், இலங்கை, மாலத்தீவு, பூட்டான் அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், 4 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்தப் போட்டி மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததால், அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய போட்டியில் வெற்றி அவசியமாகியுள்ளது.