உலகக்கோப்பை கால்பந்து: செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணி வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்றது. #FIFAWOrldCup2018
உலகக்கோப்பை கால்பந்து: செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் அணி வெற்றி
Published on

ரஷியா,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

இதில் இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் தென்கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. இரண்டாவது லீக் போட்டியில் சுவிடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது.

இந்நிலையில் இ பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி தனது கடைசி லீக்கில் செர்பியாவுடன் மோதியது. இரு அணிகளுமே வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தில், பிரேசில் வீரர் பவுலின்ஹொ தனது முதல் கோலை பதிவு செய்தார். இதனை சமன் செய்ய செர்பிய அணி வீரர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்காமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி முன்னிலை பெற்றிருந்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் பிரேசில் அணியின் சார்பில் சில்வா 1 கோல் அடித்தார். இதன் மூலம் பிரேசில் அணி 2 கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. கடைசி வரை செர்பியா அணியினரால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றிபெற்றது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com