தென்கொரியா அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா

3-வது இடம் பெற்று முதல் சுற்றோடு நடையை கட்டியது.
தென்கொரியா அணியின் தலைமை பயிற்சியாளர் ராஜினாமா
Published on

சியோல்,

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 'ஏ' பிரிவில் அங்கம் வகித்த தென்கொரியா ஒரு வெற்றி (செக்குடியரசுக்கு எதிராக), 2 தோல்வி (மெக்சிகோ, தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக) கண்டு 3-வது இடம் பெற்று முதல் சுற்றோடு நடையை கட்டியது.

இதற்கிடையே, தென்கொரியா அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஹாங் மியுங் போ விலகி உள்ளார். அணியின் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும், இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். தென்கொரியாவை சேர்ந்த 57 வயது ஹாங் மியுங் போ 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-வது முறையாக தலைமை பயிற்சியாளர் ஆனார். முன்னதாக 2014-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தென்கொரியா முதல் சுற்றுடன் வெளியேறிய போதும் அவரே பயிற்சியாள ராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com