ஸ்பெயினா, அர்ஜென்டினாவா? வெற்றி யாருக்கு... ரொனால்டோ அளித்த பதில்

போட்டியின் எல்லா தருணத்திலும் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தும் என்று கூறினார்.
உலகக்கோப்பை, கால்பந்து
Published on

நியூயார்க்

உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிப்போட்டியில் வெற்றி யாருக்கு என ரொனால்டோ பதில் அளித்துள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பான இறுதி கட்டத்திற்கு வந்தடைந்து உள்ளது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்று விளையாடிய 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முடிவில், அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த போட்டி இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் நடைபெறும்.

இந்த நிலையில், பிரேசிலின் பழம்பெரும் வீரரான ரொனால்டோ நசாரியோ, ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா இடையேயான போட்டியில் ஸ்பெயின் அணியே வெற்றி பெறும். அதுவும் எளிதில்... என்று குறிப்பிட்டு உள்ளார்.

அர்ஜென்டினாவின் பலம்

போட்டியில் ஸ்பெயின் அணி ஒன்று அல்லது 2 கோல்கள் அடித்து முன்னிலைக்கு சென்று விட்டால், அதன்பின்னர் போட்டியின் போக்கை அர்ஜென்டினாவால் மாற்ற முடியாது என்றே நான் நினைக்கிறேன். அதற்கான பலம் அந்த அணிக்கு கிடையாது. ஏனெனில், போட்டியின் எல்லா தருணத்திலும் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தும் என்று கூறினார்.

எனக்கு, எப்போதும் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகியவையே மிக பிடித்த அணிகள் என கூறிய அவர், போட்டியில் அந்த இரு அணிகளில் ஒன்றே வெற்றி பெறும் என்றும் கூறினார்.

கோப்பைக்கான கனவு

எனினும், அரையிறுதியில் பிரான்ஸ் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி போட்டியில், 2-ம் பாதியில் அதிரடியாக விளையாடிய அர்ஜென்டினா, 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, கோப்பைக்கான கனவை தக்க வைத்து கொண்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com