

லாஸ் ஏஞ்சலிஸ்,
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் ஸ்பெயின் கோல்கீப்பர் உனாய் சிமோன்.
23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நாக்-அவுட் சுற்றில் நடந்த ஒரு ஆட்டத்தில், ஸ்பெயின் அணி ஆஸ்திரியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் ஸ்பெயின் அணி ஒரு கோலையும் விட்டுக்கொடுக்கவில்லை. இதன் மூலம் அந்த அணியின் கோல்கீப்பர் உனாய் சிமோன், உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து 519 நிமிடங்கள் எந்த அணிக்கும் கோல் அடிக்க வாய்ப்பு அளிக்காமல் சிமோன் விளையாடியுள்ளார். இதன் மூலம் இத்தாலியின் முன்னாள் கோல்கீப்பர் வால்டர் செங்கா படைத்திருந்த 517 நிமிடங்கள் சாதனையை முறியடித்துள்ளார்.
ஸ்பெயின் அணி ரவுண்ட் ஆப் 16 சுற்றில் வருகிற 7-ம் தேதி ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியுடன் மோத உள்ளது.