உலகக் கோப்பை வரலாற்றின் ’கோல்’ மன்னன் - குளோசின் சாதனைக்கு ஆபத்து?

குளோஸ், 16 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பை வரலாற்றின் ’கோல்’ மன்னன் - குளோசின் சாதனைக்கு ஆபத்து?
Published on

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை மிரோஸ்லாவ் குளோஸ் தக்க வைத்துள்ளார். ஜெர்மனி அணிக்காக விளையாடிய குளோஸ், 24 உலகக் கோப்பை போட்டிகளில் 16 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரொனால்டோ நசாரியோ 15 கோல்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

வேட்டையில் மெஸ்ஸி, எம்பாப்பே

இந்த சாதனை 2026 உலகக் கோப்பையில் முறியடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மெஸ்ஸி தற்போது உலகக் கோப்பை வரலாற்றில் 26 போட்டிகளில் 13 கோல்கள் அடித்துள்ளார். அதேபோல் கிலியன் எம்பாப்பே வெறும் 14 உலகக் கோப்பை ஆட்டங்களில் 12 கோல்கள் அடித்துள்ளார். இதனால் இந்த உலகக் கோப்பையில் குளோசின் 16 கோல் சாதனைக்கு சவால் எழுந்துள்ளது.

தொடங்கிய உலகக் கோப்பை

23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடங்கி ஜூலை 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன.

ஜூலை 19-ல் முடிசூடும் சாம்பியன்

உலகக் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த மெகா தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 19-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் உலகின் புதிய சாம்பியன் யார் என்பது தீர்மானிக்கப்படும். அதே நேரத்தில், குளோசின் அதிக கோல்கள் சாதனை தொடருமா அல்லது மெஸ்ஸி, எம்பாப்பே புதிய வரலாறு படைப்பார்களா என்பதும் கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com