உலகக் கோப்பை கால்பந்து 2026: அதிவேக கோல் அடித்த டாப்-5 வீரர்கள்... பட்டியல் இதோ

உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய மேடையில் கோல் அடிப்பது எளிதான விஷயமல்ல.
உலகக் கோப்பை கால்பந்து 2026:  அதிவேக கோல் அடித்த டாப்-5 வீரர்கள்... பட்டியல் இதோ
Published on

நியூயார்க்,

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் அதிவேக கோலை செக் குடியரசு வீரர் மைக்கல் சாடிலெக் அடித்துள்ளார்.

104 போட்டிகள்

2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 104 போட்டிகள் நடைபெறவுள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 19-ம் தேதி நியூயார்க்-நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் கோலின் முக்கியத்துவம்

உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய மேடையில் கோல் அடிப்பது எளிதான விஷயமல்ல. கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் பந்தை வலைக்குள் அடிப்பது வீரர்களுக்கு சவாலாக இருக்கும். அதிலும், போட்டியின் தொடக்கத்திலேயே கோல் அடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம்.

அதிவேக கோல்

அப்படி இருக்கையில் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் அதிவேக கோலை செக் குடியரசு வீரர் மைக்கல் சாடிலெக் அடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 5 நிமிடங்கள் 7 வினாடிகளில் கோல் அடித்து தனது அணிக்கு ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தந்தார்.

அதிவேக கோல் அடித்த டாப்-5 வீரர்கள்

1. மைக்கல் சாடிலெக் (செக் குடியரசு)

எதிரணி: தென் ஆப்பிரிக்கா

நேரம்: 5 நிமிடம் 7 வினாடிகள்

2. ஜோவோ நெவ்ஸ் (போர்ச்சுகல்)

எதிரணி: காங்கோ

நேரம்: 5 நிமிடம் 30 வினாடிகள்

3. பெலிக்ஸ் என்மேச்சா (ஜெர்மனி)

எதிரணி: குராசோ

நேரம்: 5 நிமிடம் 30 வினாடிகள்

4. யாசின் அயாரி (ஸ்வீடன்)

எதிரணி: துனிசியா

நேரம்: 7 நிமிடங்கள்

5. ஜூலியன் குய்னோன்ஸ் (மெக்சிகோ)

எதிரணி: தென் ஆப்பிரிக்கா

நேரம்: 8 நிமிடங்கள்

தொடக்கத்திலேயே முத்திரை பதித்த வீரர்கள்

உலகக் கோப்பை தொடர் தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையில், பல முன்னணி வீரர்கள் தங்களது கோல் கணக்கை தொடங்கி விட்டனர். அடுத்தடுத்த போட்டிகளில் இந்த சாதனை பட்டியலில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பாரக்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com