ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்

அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது.
ஸ்பெயின் அணிக்கு உலகக்கோப்பையை வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
Published on

நியூயார்க்,

23வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா - ஸ்பெயின் மோதின. இப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பையை ஸ்பெயின் வென்றது.

இப்போட்டியில் கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 106வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் பெரன் டொரஸ் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

டொனால்டு டிரம்ப்

இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேரில் கண்டு களித்தார். இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உலகக்கோப்பையை வழங்கினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும், பிபா தலைவர் கியானி இன்பான்டினோவும் சேர்ந்து பிபா உலகக்கோப்பையை ஸ்பெயின் அணியிடம் வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com