ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு வேல்ஸ் அணி தகுதி

ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு வேல்ஸ் அணி தகுதிபெற்றது.
ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு வேல்ஸ் அணி தகுதி
Published on

கார்டிப்,

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி அடுத்த ஆண்டு (2020) நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்றில் கார்டிப்பில் நேற்று முன்தினம் நடந்த இ பிரிவு ஆட்டம் ஒன்றில் வேல்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது. ஆரோன் ராம்சி 2 கோல்கள் அடித்தார்.இந்த பிரிவில் வேல்ஸ் அணி 4 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்ததுடன், ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கும் தகுதி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com