உருகுவேயுடன் மோதும் இந்தியா... வரலாற்று சிறப்புமிக்க கால்பந்து போட்டியை எதில், எப்போது பார்க்கலாம்?

பிரேசிலுக்கு எதிராக இந்தியா 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
கால்பந்து
Published on: 

கொல்கத்தா,

இந்திய ஆண்கள் கால்பந்து அணி, இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற உருகுவே அணியை நாளை (அக்டோபர் 6) கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.

முன்னணி அணிகளுடன் இந்தியா மோதல்

சமீபத்தில் உலகக் கோப்பையில் பங்கேற்ற பனாமா அணியை எதிர்கொண்ட இந்தியா 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இதனைத் தொடர்ந்து 5 முறை உலக சாம்பியனான பிரேசிலுக்கு எதிராக விளையாடிய இந்தியா 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

தற்போது தென் அமெரிக்காவின் முன்னணி அணியான உருகுவேயை எதிர்கொள்வது இந்திய வீரர்களுக்கு தங்களது திறமையை நிரூபிக்க மற்றொரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

போட்டி எப்போது?

போட்டி: இந்தியா - உருகுவே

தேதி: அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை

நேரம்: இரவு 7.30 மணி

இடம்: விவேகானந்த யுவ பாரதி கிரீராங்கன், கொல்கத்தா

நேரடி ஒளிபரப்பு

இந்தியா - உருகுவே போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3, சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், சோனி லிவ் செயலியிலும் நேரலையாக காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com