

வாஷிங்டன்,
உலகக் கோப்பை கால்பந்தின் மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் போட்டியில் மோதும் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள், இந்தப் போட்டியில் விளையாடுவதில் இரு அணிகளுக்கும் பெரிய விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளன. நாளை இரு அணிகளுக்கும் இடையே 3வது இடத்துக்கான போட்டி நடைபெற உள்ளது.
பிரான்ஸ் பயிற்சியாளர் டெஷாம்ப்ஸ் கூறியதாவது,
இது நட்புறவு ஆட்டம் அல்ல. இது மூன்றாவது இடத்தை நிர்ணயிக்கும் போட்டி. இந்த கடைசி இலக்கை எட்டுவது வீரர்கள், பயிற்சியாளர் குழு மற்றும் என்னுடைய பொறுப்பு. இது இறுதிப்போட்டியை விட முக்கியத்துவம் குறைந்ததாக இருக்கலாம். இங்கிலாந்து அணியும் இந்தப் போட்டியை விளையாட விரும்பவில்லை; நாங்களும் விரும்பவில்லை. ஆனால் தற்போது இந்தச் சூழலில் இருக்கிறோம்.
மூன்றாவது இடத்தைப் பிடிப்பதே இப்போது எங்களின் இலக்கு. பிரான்ஸ் அணியின் ஜெர்சியை அணியும் போது அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.என தெரிவித்தார்.
இங்கிலாந்து அணி பயிற்சியாளர் டூசெல் கூறியதாவது,
இந்த இறுதிக்கட்டத்தை எட்டிய நான்கு அணிகளுமே நியூயார்க்கில் நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடவே விரும்பின. நாளைய இந்தப் போட்டியில் விளையாட யாருமே விரும்பவில்லை. ஆனால் இது உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வமான போட்டி. எனவே எங்களின் முழு கவனத்தையும் அதில் செலுத்தி, சிறப்பாக செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
உலகமே உற்றுநோக்கும் 23-வது உலக கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை (ஞாயிற்றுக்கி ழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சி யில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடக்கிறது. அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் கோதாவில் குதிக்கின்றன.