உலகக் கோப்பை இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்

அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை இறுதிப்போட்டி: மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து கூறிய சுதர்சன் பட்நாயக்
Published on

நியூஜெர்சி,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பத்தை மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் உருவாக்கி உள்ளார்.உலகின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வவ்போது சிற்பங்களை உருவாக்கி வருகிறார்.

அர்ஜென்டினா-ஸ்பெயின் இறுதிப்போட்டிக்கு முன், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 8 அடி உயர மணல் சிற்பமாக உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.இந்தச் சிற்பத்தில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவின் தேசியக் கொடிகளுடன், உலகக் கோப்பை 2026 இடம்பெற்றுள்ளது. இறுதிப்போட்டிக்கு வாழ்த்துகள்" என்ற செய்தியும் இடம்பெற்றுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com