

வாஷிங்டன்,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிஅமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழா 'கிளைமாக்சை' எட்டி விட்டது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் நள்ளிரவு 12.30 மணிக்கு நியூஜெர்சியில் நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி, ஸ்பெயினுடன் மோதுகிறது.
இந்த நிலையில், நியூஜெர்சியில் நடைபெறும் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரில் பார்த்து ரசிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.