உலகக்கோப்பை கால்பந்து: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்திய பிரேசில்

போட்டியின் 7-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காக, வினிசியஸ் ஜூனியர் முதல் கோலை போட்டார்.

உலகக்கோப்பை கால்பந்து:  ஸ்காட்லாந்து அணியை வீழ்த்திய பிரேசில்
Published on

மியாமி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் மியாமி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 3.30 மணிக்கு நடைபெற்ற 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின.

7-வது நிமிடம்

இதில், போட்டியின் 7-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காக, வினிசியஸ் ஜூனியர் முதல் கோலை போட்டார். 1-0 புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது. அதன்பின்னர், முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை. இதனால், பிரேசில் அணியின் கை ஓங்கி இருந்தது.

60-வது நிமிடம்

2-வது பாதியின் 3-வது நிமிடத்தில் (48) வினிசியஸ் ஜூனியர் மற்றொரு கோலை போட்டார். இதனால், 2-0 என்ற புள்ளி கணக்கில் பிரேசில் வெற்றியை நோக்கி சென்றது. தொடர்ந்து 60-வது நிமிடத்தில் மேத்யூஸ் குன்ஹா 3-வது கோலை போட்டார்.

அதன்பின்பு கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்காட்லாந்து அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com