உலகக்கோப்பை கால்பந்து: 2-வது பாதியில் கோல் அடித்து காங்கோவை வீழ்த்திய கொலம்பியா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் காங்கோ அணியை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி கொலம்பியா வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கால்பந்து:  2-வது பாதியில் கோல் அடித்து காங்கோவை வீழ்த்திய கொலம்பியா
Published on

கவுதலஜாரா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில், கொலம்பியா மற்றும் காங்கோ அணிகள் முதல் பாதியின் இறுதி வரை கோல் எதுவும் அடிக்கவில்லை.

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் எஸ்டாடியோ கவுதலஜாரா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்ற 'கே' பிரிவு லீக் ஆட்டத்தில் கொலம்பியா மற்றும் காங்கோ அணிகள் விளையாடின.

பவுல் ஆட்டம்

இதில், போட்டியின் முதல் பாதியின் இறுதி வரை எந்த அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கொலம்பியா அணி 4 முறை பவுல் (விதி மீறிய ஆட்டம்) மற்றும் காங்கோ அணி 6 முறை பவுல் ஆடியது. போட்டி முடிவில், கொலம்பியா அணிக்கு 2 முறை, காங்கோவுக்கு ஒரு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

கொலம்பியா முன்னிலை

போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சி வீணானது. இதனால், 2-வது பாதி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில், 2-வது பாதியின் 76-வது நிமிடத்தில் டேனியல் முனோஜ் அடித்த கோலால் கொலம்பியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின்னர் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால், காங்கோ அணியை வீழ்த்தி கொலம்பியா வெற்றி பெற்றது.

முதல் இடம்

புள்ளி பட்டியலில் கொலம்பியா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. போர்ச்சுகல் மற்றும் காங்கோ அணிகள் முறையே 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் உள்ளன. உஸ்பெகிஸ்தான் 4-ம் இடத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com