

அட்லாண்டா
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் காங்கோ முன்னிலை பெற்றுள்ளது.
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், இரவு 9.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் காங்கோ மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா மைதானத்தில் நடந்த இந்த போட்டி தொடங்கிய 7-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது. காங்கோ அணியின் வீரர் பிரையன் சிபெங்கா, இங்கிலாந்து வீரர்களிடம் சிக்காமல் எளிதில் கடந்து சென்று அதிரடியாக முதல் கோலை போட்டு ஆட்டத்தின் விறுவிறுப்பை கூட்டினார்.
எனினும், அதன்பின்னர் இரு அணிகளின் தரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என காங்கோ முன்னிலை பெற்றுள்ளது.
இதேபோன்று போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.