உலகக் கோப்பை கால்பந்து தோல்வி: நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா

நெதர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ரொனால்ட் கோமன் தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.

உலகக் கோப்பை கால்பந்து தோல்வி: நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் ராஜினாமா
Published on

ஆம்ஸ்டர்டாம்,

நடப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது சுற்றில் (ரவுண்ட் 32) நெதர்லாந்து அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 2-3 என்ற கோல் கணக்கில் மொராக்கோவிடம் தோற்று நடையை கட்டியது. உலகக் கோப்பையில் 3 முறை 2-வது இடம் பிடித்த அணியான நெதர்லாந்தின் தோல்வியால் அந்த நாட்டு ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து இருப்பதுடன் வீரர்களை சமூக வலை தளங்களில் சரமாரியாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் நெதர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ரொனால்ட் கோமன் தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.

நெதர்லாந்து முன்னாள் வீரரான 63 வயது ரொனால்ட் கோமன் 2-வது முறையாக 2023-ம் ஆண்டு முதல் இந்த பதவியை வகித்து வந்தார். பதவி விலகிய ரொனால்ட் கோமன் தனது சமூக வலைதள பதிவில், 'உலகக் கோப்பையை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் கனவு கண்டோம். ஆனால் அது கைகூடவில்லை. அதனால் என்னை விட அதிகமாக ஏமாற்றம் அடைந்தவர் யாரும் இருக்க முடியாது. என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com