உலகக்கோப்பை கால்பந்து: 2-வது பாதியில் கோல்கள் அடித்து காங்கோவை வீழ்த்திய இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் ஹாரி கனே 75 மற்றும் 86 ஆகிய நிமிடங்களில் 2 கோல்களை போட்டார்.

உலகக்கோப்பை கால்பந்து:  2-வது பாதியில் கோல்கள் அடித்து காங்கோவை வீழ்த்திய இங்கிலாந்து
Published on

அட்லாண்டா

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 2-வது பாதியில் கோல்கள் அடித்து காங்கோ அணியை இங்கிலாந்து வீழ்த்தியது.

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், இரவு 9.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் காங்கோ மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின.

7-வது நிமிடத்தில் கோல்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா மைதானத்தில் நடந்த இந்த போட்டி தொடங்கிய 7-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது. காங்கோ அணியின் வீரர் பிரையன் சிபெங்கா, இங்கிலாந்து வீரர்களிடம் சிக்காமல் எளிதில் கடந்து சென்று அதிரடியாக முதல் கோலை போட்டு ஆட்டத்தின் விறுவிறுப்பை கூட்டினார்.

எனினும், அதன்பின்னர் இரு அணிகளின் தரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என காங்கோ முன்னிலை பெற்றது.

2 கோல்கள்

2-வது பாதியில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் ஹாரி கனே 75 மற்றும் 86 ஆகிய நிமிடங்களில் 2 கோல்களை போட்டார். இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. காங்கோ பின்தங்கியது. இதன்பின்னர் கடைசி வரை வேறு கோல்கள் அடிக்கப்படவில்லை.

இதனால், காங்கோவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதேபோன்று போட்டியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com