உலகக்கோப்பை கால்பந்து: பனாமா அணியை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பனாமா அணியை 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இங்கிலாந்து
உலகக்கோப்பை கால்பந்து: பனாமா அணியை வீழ்த்தியது இங்கிலாந்து
Published on

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் பனாமா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

குரூப் எல் பிரிவில் இடம்பெற்றுள்ள பனாமா மற்றும் இங்கிலாந்து அணிகள் நடத்திய இந்த பலப்பரீட்சையில் 0-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதி எந்தவொரு கோலும் இல்லாமல் சமனில் நிறைவடந்தது.

ஆனால் இரண்டாவது பாதியில் 62வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் ஜூட் பெல்லிங்ஹாம் முதல் கோலை அடித்து அசத்தினார்.

அவரை தொடர்ந்து 67 நிமிடத்தில் பேயர்ன் மியூனிக் அணியின் நட்சத்திர வீரரான ஹாரி கேன் தன்னுடைய தலையால் முட்டி மற்றொரு கோலை அடித்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com