உலகக் கோப்பை கால்பந்து: ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல தடை

மைதானத்திற்கு காண வரும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல திடீரென தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.


உலகக் கோப்பை கால்பந்து: ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல  தடை
Published on

நியூயார்க்,

48 நாடுகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை மைதானத்திற்கு காண வரும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்ல திடீரென தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

முன்பு ரசிகர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களை எடுத்து வந்து மைதானத்தில் தண்ணீர் பிடித்துக் கொள்வது வழக்கம். ஆனால் பாட்டில்களை மைதானத்தில் தூக்கி எறிந்து வீரர்கள் காயமடைய வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கருதி அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சர் வதேச கால்பந்து சம்மேளனம் விளக்கம் அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com