

பிலடெல்பியா
உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒன்றில், 2-வது பாதியில் கோல் அடித்து பராகுவேவை பிரான்ஸ் வீழ்த்தியது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா சார்பில் நடத்தப்பட்டு வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று, 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்றுகள்) முடிந்து, 3-வது சுற்று போட்டிகள் (ரவுண்ட் ஆப் 16) நடந்து வருகின்றன. இதில், வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில், அதிகாலை 2.30 மணிக்கு அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடந்த 3-வது சுற்று போட்டி ஒன்றில் பராகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடின. இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றன. எனினும், கோல் கீப்பர்கள் கோல் அடிக்க விடவில்லை.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இதனால், 2-வது பாதியில் கோலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
2-வது பாதியில் பிரான்சின் கைலியன் எம்பாப்பே 70-வது நிமிடத்தில் கோல் போட்டார். இதனால், 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் முன்னிலையில் இருந்தது. அதன்பின்பு கோல் அடிக்கப்படவில்லை. போட்டி முடிந்த பின்னர் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அப்போதும் கோல் விழவில்லை. இதனால், பிரான்ஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.