உலகக் கோப்பை கால்பந்து: செனகலை பந்தாடி வெற்றி பெற்ற பிரான்ஸ்

பிரான்ஸ் அணியின் கட்டுப்பாட்டில் தான் பந்து அதிக நேரம் வலம் வந்தது.
உலகக் கோப்பை கால்பந்து: செனகலை பந்தாடி வெற்றி பெற்ற பிரான்ஸ்
Published on

உலகக் கோப்பை கால்பந்து

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ் வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகள் என மொத் தம் 32 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக் குள் நுழையும்.

பிரான்ஸ்-செனகல்

இதில் அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த ‘ஐ’பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ்-செனகல் அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில் பிரான்ஸ் அணியின் கட்டுப்பாட்டில் தான் பந்து அதிக நேரம் வலம் வந்தது. தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த அந்த அணியினர் எதிரணியின் கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டாலும், பின்கள வீரர்கள் மற்றும் கோல் கீப்பரின் தடுப்பு அரணை தகர்க்க முடியாமல் தவித்தனர்.

இறுதியில், 3-1 என்ற கணக்கில் சென்கல் அணியை பந்தாடி பிரான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணி சார்பில் கைலியன் எம்பாப்பே 2 கோல்களை அடித்தார், பிராட்லி பார்கோலா ஒரு கோல் அடித்தார். செனகல் அணியில் இப்ராஹிம் மபாயே ஒரு கோல் அடித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com