

சியாட்,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும். தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் 'நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.
இந்தநிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் களம் இறங்கி உள்ளன. இந்தப் போட்டி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள சியாட்டில் மைதானத்தில் தொடங்கி உள்ளது.
இதுவரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும், எகிப்து அணி பெல்ஜியத்திற்கு எதிராக 3-1 என்ற வலுவான வரலாற்று முன்னிலையைக் கொண்டுள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை சந்தித்துள்ளன.