உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் பராகுவே முன்னிலை

போட்டியின் 42-வது நிமிடத்தில் பராகுவே அணி வீரர் ஜூலியோ என்சிசோ முதல் கோலை போட்டார்.
உலகக்கோப்பை கால்பந்து, ஜெர்மனி, பராகுவே
ஜூலியோ என்சிசோ
Published on

போஸ்டன்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் பாதியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் பராகுவே அணி முன்னிலையில் உள்ளது.

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன. 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

முதல் கோல்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி மற்றும் பராகுவே அணிகள் விளையாடின. அமெரிக்காவின் போஸ்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 42-வது நிமிடத்தில் பராகுவே அணி வீரர் ஜூலியோ என்சிசோ முதல் கோலை போட்டார்.

அதன்பின்னர், கோல் எதுவும் விழவில்லை. இதனால், முதல் பாதி முடிவில் 1-0 என்ற புள்ளி கணக்கில் பராகுவே அணி முன்னிலையில் உள்ளது. ஜெர்மனி பின்தங்கி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com