

டொரண்டோ
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல்-குரோஷியா போட்டியின் முதல் பாதி கோல் எதுவுமின்றி முடிந்தது.
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், அதிகாலை 4.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் மற்றும் குரோஷியா அணிகள் விளையாடின.
கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சித்தனர். எனினும், கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-0 என இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. போட்டியின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணிக்கு ஒரு முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. போட்டியின் 2-வது பாதி விறுவிறுப்பாக இருக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.