உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று; இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர், 2026-ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது.
Image Courtesy: @IndianFootball
Image Courtesy: @IndianFootball
Published on

அசாம்,

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர், 2026-ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இந்த ஆட்டம் அசாம் மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் இந்தியாவின் சுனில் சேத்ரி கோல் அடித்து 1-0 என முன்னிலப் பெற்று தந்தார். இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 2 கோல்கள் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து பதில் கோல் திருப்ப இந்திய அணி கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஆப்கானிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com