

மான்டிரே
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தென்கொரியாவை, 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் இந்த போட்டியில், எஸ்டாடியோ மான்டிரே ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்ற 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் தென்கொரியா அணிகள் விளையாடின.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால், 2-வது பாதியில் கோலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.
அது வீண் போகவில்லை. போட்டியின் 63-வது நிமிடத்தில் தென்ஆப்பிரிக்க அணிக்காக, தபிலோ மசிகோ முதல் கோலை போட்டார். இதனால் 1-0 புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது. அதன்பின்னர், கோல் எதுவும் விழவில்லை. போட்டி நிறைவில் தென்கொரியாவை, 1-0 புள்ளி கணக்கில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில், மெக்சிகோ 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் (9 புள்ளிகள்) உள்ளது. தென்ஆப்பிரிக்கா (4 புள்ளிகள்), தென்கொரியா (3 புள்ளிகள்) மற்றும் செக் குடியரசு (1 புள்ளிகள்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.