உலகக் கோப்பை கால்பந்து: தென் ஆப்பிரிக்கா - செக்குடியரசு இடையிலான ஆட்டம் டிரா

போட்டியின் 6-வது நிமிடத்திலேயே செக்குடியரசு அணி தனது முதல் கோலை அடித்தது.
உலகக் கோப்பை கால்பந்து: தென் ஆப்பிரிக்கா - செக்குடியரசு இடையிலான ஆட்டம் டிரா
Published on

சென்னை,

உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், குரூப்-எ பிரிவில் இடம்பெற்றுள்ள செக்குடியரசு மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதின. அட்லான்டா மைதானத்தில் நடந்த போட்டியின் 6-வது நிமிடத்திலேயே செக்குடியரசு அணி தனது முதல் கோலை அடித்தது.

செக் குடியரசு அணியின் அலெக்சான்டர் சோஜ்கா வழங்கிய அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி மைக்கேல் சடிலேக் கோலை அடித்தார். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பிடித்தது.ஆட்டத்தின் முதல் பாதி வரை செக்குடியரசு அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் நீடித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின. இதற்கு பலனாக 83-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தன. ஆட்டத்தின் இறுதியில் இரு அணிகளும் வெற்றிக்கான கூடுதல் கோலை அடிக்க தவறின. இதனால் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com