உலகக்கோப்பை கால்பந்து: முதல் பாதியில் 1-0 புள்ளி கணக்கில் ஜப்பான் அணி முன்னிலை

போட்டியின் 29-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைஷு சனோ அதிரடியாக, அணிக்கான முதல் கோலை போட்டார்.

உலகக்கோப்பை கால்பந்து:  முதல் பாதியில் 1-0 புள்ளி கணக்கில் ஜப்பான் அணி முன்னிலை
Published on

ஹூஸ்டன்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் பாதியில் 1-0 புள்ளி கணக்கில் ஜப்பான் அணி முன்னிலையில் உள்ளது.

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன.

முதல் பாதி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்றிரவு 10.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில் மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. அமெரிக்காவின் ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 29-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் கைஷு சனோ அதிரடியாக, அணிக்கான முதல் கோலை போட்டார்.

இதனால் 1-0 புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது. அதன்பின்னர், கோல் எதுவும் விழவில்லை. முதல் பாதி முடிவில் ஜப்பான் அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது பாதியில் கோல்கள் விழும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com