உலகக்கோப்பை கால்பந்து: 2-வது பாதியில் அதிரடி; ஹைதியை வீழ்த்திய மொராக்கோ

போட்டியின் 10-வது நிமிடத்தில் ஹைதி அணிக்காக, யாசின் பவ்னவ் முதல் கோலை போட்டார்.
உலகக்கோப்பை கால்பந்து:  2-வது பாதியில் அதிரடி; ஹைதியை வீழ்த்திய மொராக்கோ
Published on

அட்லாண்டா

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஹைதியை 4-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்றது.

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் அட்லாண்டா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 3.30 மணிக்கு நடைபெற்ற 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் மொராக்கோ மற்றும் ஹைதி அணிகள் விளையாடின.

10-வது நிமிடம்

இதில், போட்டியின் 10-வது நிமிடத்தில் ஹைதி அணிக்காக, யாசின் பவ்னவ் முதல் கோலை போட்டார். இதனால் 1-0 புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது. அதன்பின்னர், அச்ரப் ஹகீமி 39-வது நிமிடத்தில் மொராக்கோவுக்கான முதல் கோலை போட்டார். 1-1 புள்ளி கணக்கில் போட்டி சமன் அடைந்தது. போட்டியில் விறுவிறுப்பும் ஏற்பட்டது.

2-வது கோல்

தொடர்ந்து 43-வது நிமிடத்தில் ஹைதியின் வில்சன் இசிடோர் 2-வது கோலை போட்டார். 2-1 என்ற புள்ளி கணக்கில் ஹைதி முன்னிலையில் இருந்தது.

மொராக்கோ முன்னிலை

அதன்பின்னர் மொராக்கோவின் இஸ்மாயில் சாய்பாரி 46-வது நிமிடத்திலும், சவுபியான் ரகீமி 78-வது நிமிடத்திலும், கெஸ்சிம் யாசின் 89-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இதனால், போட்டி முடிவில் 4-2 என்ற புள்ளி கணக்கில் ஹைதியை வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com