சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய சாதனை... எம்பாப்பேவை முந்திய லாமின் யமால்

எம்பாப்பே 20 வயதுக்கு முன்பாக சாம்பியன்ஸ் லீக்கில் 13 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
லாமின் யமால்
Published on: 

பார்சிலோனா,

பார்சிலோனா அணியின் இளம் நட்சத்திர வீரர் லாமின் யமால், ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் 20 வயதுக்கு முன்பாக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்டன் வில்லா

சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் பார்சிலோனா அணி, தனது சொந்த மைதானத்தில் ஆஸ்டன் வில்லாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலேயே லாமின் யமால் கோல் அடித்து பார்சிலோனாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இரண்டாவது பாதியில் ராபின்ஹா 52 மற்றும் 64-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எம்பாப்பே

ஆஸ்டன் வில்லாவுக்கு எதிராக அடித்த கோலின் மூலம், சாம்பியன்ஸ் லீக் தொடரில் யமாலின் மொத்த கோல்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதன் மூலம் 20 வயதை அடைவதற்கு முன்பாக சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன்பு பிரான்ஸ் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே 20 வயதுக்கு முன்பாக சாம்பியன்ஸ் லீக்கில் 13 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது 37 போட்டிகளில் விளையாடியுள்ள யமால், 14 கோல்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

X