

போபால்,
9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மத்தியபிர தேச மாநிலம் போபாலில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந் திய அணி, மலேசியாவை சந்திக்கிறது.
சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, சீனா, ஜப்பான் ஆகிய அணிகளை வரிசையாக துவம் சம் செய்து முதலிடம் பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. நடப்பு தொடரில் மொத்தம் 23 கோல்கள் அடித்து தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடும் இந்திய அணி, தனது கடைசி 14 சர்வதேச போட்டிகளில் தோல்வியின் பக் கமே சென்றதில்லை. இதனால் தனது சிறந்த தரநிலையாக உலக தரவரிசை யில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
உள்ளூரில் தொடர்ந்து 3-வது முறையாக (ஹாட்ரிக்) மகுடம் சூடுவதற்கு குறிவைத்து இருக்கும் இந்திய அணியில் தீபிகா, லால்ரெம்சியாமி, நேஹா, நவ்னீத், மும்தாஜ் கான், கேப்டன் சலிமா டெடி உள்ளிட்ட வீராங்கனைகள் சூப்பர் பார்மில் உள்ளனர்.
மலேசிய அணி 2 வெற்றி (தென்கொரியா, தாய்லாந்துக்கு எதிராக). ஒரு டிரா (சீனாவுக்கு எதிராக), 2 தோல்வி (இந் தியா, ஜப்பான் அணிகளிடம்) என 4-வது இடம் பெற்றது. பலம் வாய்ந்த இந்திய அணி ஏற்கனவே லீக் சுற்றில் மலேசி யாவை 4-1 என்ற கணக்கில் வென்றதால், இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடக்கும் மற்றொரு அரைஇறுதியில் ஜப்பான் அணி, சீனாவுடன் மல்லுக்கட்டுகிறது. இவ்விரு அணிகளும் லீக்கில் சந்தித்த ஆட்டத்தில் ஜப்பான் அணி 3-1 என்ற கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீனாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க சீனா முயற்சிக்கும்.
போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.