ஆசிய கோப்பை ஆக்கி; இந்தியா-தென்கொரியா இன்று மோதல்

இந்திய மகளிர் அணி, தென்கொரியாவை எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை ஆக்கி; இந்தியா-தென்கொரியா இன்று மோதல்
Published on: 

போபாலில் நடைபெற்று வரும் 9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று இந்தப் போட்டி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு சீனா – மலேசியா அணிகளும், மாலை 4.45 மணிக்கு தாய்லாந்து – ஜப்பான் அணிகளும் மோதுகின்றன. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மலேசியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

இந்திய அணி

இந்திய அணியின் கேப்டனாக சலிமா டேட்டே செயல்படுகிறார். மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணி, இந்த முறையும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. தென்கொரிய அணியும் ஆசிய ஹாக்கியில் வலுவான அணியாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 27-ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 28-ம் தேதியும் நடைபெறுகிறது.

X