ஆசிய கோப்பை: பாகிஸ்தான், ஓமன் விலகல்.. புதிய அணிகள் சேர்ப்பு


ஆசிய கோப்பை:  பாகிஸ்தான், ஓமன் விலகல்.. புதிய அணிகள் சேர்ப்பு
x

கோப்புப்படம்

ஆசிய கோப்பை ஆக்கி தொடரில் இருந்து ஓமன் அணி கடைசி நேரத்தில் விலகியது.

புதுடெல்லி,

12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் வரும் 29-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா, ஜப்பான், மலேசியா, ஓமன், சீன தைபே ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் பாகிஸ்தான் அணி பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி இந்தியா வர மறுத்தது. இதனால் அந்த அணிக்கு பதிலாக வங்காளதேசம் கலந்து கொள்கிறது. அத்துடன் ஓமன் அணியும் கடைசி நேரத்தில் விலகி இருக்கிறது. அந்த அணிக்கு பதிலாக கஜகஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story