ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா - சீனா இன்று மோதல்

இறுதிப்போட்டியில் இந்தியா- சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி இறுதிப்போட்டி: இந்தியா - சீனா இன்று மோதல்
Published on: 

9-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி மத்தியபிரதேச தலைநகர் போபாலில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த இரண்டாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் அணியுமான இந்தியா. 19-வது இடத்தில் உள்ள மலேசியாவை எதிர்கொண்டது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 6-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை துவம்சம் செய்து 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்திய அணியில் மும்தாஜ் கான் (10-வது நிமிடம்), நவ்னீத் கவுர் (18-வது நிமிடம்). தீபிகா (25-வது. 30-வது நிமிடம்). சுனிலிதா டாப்போ (33-வது நிமிடம்), இஷிகா (57-வது நிமிடம்) கோலடித்தனர். மலேசியா தரப்பில் நூர் அஜார் 27-வது நிமிடத்திலும், நுராமிராக் சுகிபி 52-வது நிமிடத்திலும் கோல் திருப்பினர்.

மற்றொரு அரைஇறுதியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியான சீனா, முன்னாள் சாம்பியனான ஜப்பானுடன் மல்லுக்கட்டியது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு செல்லும் என்றும் எல்லோ ரும் எதிர்பார்த்த நிலையில் 60-வது மற்றும் கடைசி நிமிடத்தில் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீராங்கனை ஜாங் ஹியாங் கோலடித்தார்.முடிவில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததுடன், லீக் சுற்றில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை

இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6-2 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

X