

ஜலந்தர்,
6 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நேற்று தொடங்கியது. நடப்பு சாம்பிய னான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடியது. மன்தீப்சிங் 'ஹாட்ரிக்' கோல் (3, 10, 54-வது நிமிடம்) அடித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், தில்பிரீத் சிங், ஹர்திக் சிங் தலா 2 கோல் போட்டனர். இந்தியா அடுத்த ஆட்டத்தில் நாளை சீனாவுடன் மோதுகிறது.