

ஜலந்தர்,
6 அணிகள் இடையிலான 9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் 13-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடிய இந்திய அணி, அடுத்து இளம் வீரர்களை கொண்ட சீனாவுடன் இன்று (இரவு 7 மணி) மல்லுகட்டுகிறது. சீனா தனது முதல் ஆட்டத்தில் 4-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் போராடி தோற்றது.
இதையொட்டி இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் புல்டான் கூறுகையில், 'இந்த சீன அணியை பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. ஏனெனில் ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடிய வீரர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லை. இது முற்றிலும் புதிய அணி. அவர்கள் விளையாடியதை இதற்கு முன்பு பார்த்ததில்லை. எனவே அவர்கள் எப்படி ஆடுவார் கள் என்பதை புரிந்து கொள்ள அவர்கள் ஏற்கனவே ஆடிய ஆட்டத்தின் வீடியோ காட்சியை பார்த்தாக வேண்டும்' என்றார். இருப்பினும் வலுவான ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
மற்ற ஆட்டங்களில் மலேசியா- தென்கொரியா (பிற்பகல் 2.30 மணி), ஜப்பான்- வங்காளதேசம் (மாலை 4.45 மணி) அணிகள் மோதுகின்றன.