

9-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பஞ்சாப் மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடக் கிறது. லீக் ஆட்டங்கள் அனைத்தும் ஜலந்தரிலும், அரைஇறுதி மற்றும் இறு திப்போட்டி மொகாலியிலும் நடைபெறுகிறது.
இந்திய ஆக்கியின் அச்சாணியாக விளங்கும் பஞ்சாப்பில் 17 அண்டுகளுக்கு
பிறகு சர்வதேச ஆக்கி போட்டி அரங்கேறுகிறது. கடைசியாக இங்கு 2009-ம் ஆண்டு தங்கக் கோப்பை ஆக்கி போட்டி நடந்து இருந்தது.
இந்திய ஆக்கி அணியில் பஞ்சாப் வீரர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அணியில் பாதிக்கு மேலானவர்கள் அவர்களே. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், ஜூக்ராஜ் சிங், ஜர்மன்பிரீத் சிங், ரஜிந்தர் சிங், ஹர்திக் சிங், சுக்ஜீத் சிங். தில்பிரீத் சிங், மன்தீப் சிங், கிருஷ்ணன் பதாக் ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு சொந்த மண்ணில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சர்வதேச போட்டி யில் ஆடும் பொன்னான வாய்ப்பை பெற்றுள்ளனர். இதனால் உணர்ச்சி பெருக்குடன் காணப்படும் அவர்கள் கிடைத்த வாய்ப்பில் அசத்த ஆர்வமுடன் உள்ளனர். பயிற்சியின் போது மன்பிரீத் சிங் காயம் அடைந்து விலகியதால் அவருக்கு பதிலாக விவேக் சாகர் பிரசாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
5 முறை சாம்பியனான இந்திய அணி சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்ற உற்சாகத்துடன் இந்த போட்டியில் கால்பதிக்கிறது.
இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இன்று இரவு 7 மணிக்கு வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. வலுவான இந்தியாவின் சவாலை சமாளிப்பது வங்காளதேசத்துக்கு எளிதான காரியமாக இருக்காது.