

டோக்கியோ,
ஆசிய விளையாட்டு ஆக்கி போட்டியில் பெண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென் கொரியாவுடன் கோதாவில் குதித்தது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்திய அணியில் இஷிகா சவுத்ரி (44-வது நிமி டம்), கேப்டன் சலிமா டெடி (48-வது நிமிடம்) கோலடித்தனர். மற்றொரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனான சீன அணி பெனால்டி ஷூட்-அவுட் டில் 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா அணி கள் மோதுகின்றன. 1982-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம் பியனான ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் (பகல் 1 மணி) பலப்பரீட்சை நடத்துகிறது. மற் றொரு அரைஇறுதியில் தென்கொரியா- மலேசியா (மாலை 3.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.