சென்னை மாவட்ட சூப்பர் டிவிசன் ஆக்கி: வருமான வரி அணி வெற்றி..!

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் 58-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் 58-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஐ.சி.எப், ஐ.ஓ.பி, இந்தியன் வங்கி, தெற்கு ரெயில்வே, ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி, வருமான வரி உள்பட 15 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் தொடக்க லீக் ஆட்டத்தில் வருமான வரி அணி 3-2 என்ற கோல் கணக்கில் சாய் அணியை வீழ்த்தியது. வருமான வரி அணியில் சரவணகுமார், வினோத், அருண் குமார் தலா ஒரு கோல் அடித்தனர்.

இன்றைய ஆட்டங்களில் சென்னை துறைமுகம் - ஸ்டேட் வங்கி (பிற்பகல் 2 மணி), ஐஓபி - ஏ.ஜி அலுவலகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com