

ககாமிகஹரா
ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வரும் சூழலில், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆடவர் ஆக்கி அணிகள் இடையே, ஏ பிரிவில் நடந்த போட்டி ஒன்றில், தொடக்கம் முதல் இந்திய அணியின் கை ஓங்கி இருந்தது. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் முதல் கோல் அடிக்கப்பட்டது.
இந்தியாவின் ஷிலானந்த் லக்ராவின் அதிரடியால் விழுந்த இந்த முதல் கோலை தொடர்ந்து, 35-வது நிமிடத்திலும் அவர் ஒரு கோலை போட்டார்.
இதேபோன்று, முன்கள வீரரான தில்பிரீத் சிங் (18, 19, 37, 49) நான்கு கோல்களை அடித்தது அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி சென்றது. தவிர, சுக்ஜீத் சிங் (38, 48), அபிஷேக் (12), ரஜீந்தர் சிங் (19), மன்தீப் சிங் (21), கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (28) மற்றும் ஜக்ராஜ் சிங் (47) ஆகிய நிமிடங்களில் இந்தியாவுக்கான கோலை அடித்தனர்.
இந்தோனேசியா தரப்பில் ஆலியா அல் அர்த் 33-வது நிமிடத்தில் ஒரே ஒரு கோலை போட்டார். இதனால், 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு இந்தியா முன்னேறியது. அடுத்து நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது.