

டோக்கியோ,
44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஹாக்கி அணிய தங்கம் வென்றது. சீனாவை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்ற தருணத்தை வீராங்கனைகள் களத்திலும், டிரெஸ்ஸிங் ரூமிலும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இந்திய வீராங்கனைகளின் கொண்டாட்டக் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. டிரெஸ்ஸிங் ரூமில் வீராங்கனைகள் ஒன்றாகச் சேர்ந்து நடனமாடி, 'சாம்பியன் , சாம்பியன்' என்று உற்சாகக் குரல் எழுப்பினர்.
இந்த தங்கத்தின் மூலம் இந்திய மகளிர் ஹாக்கி அணி 1982-க்குப் பிறகு முதல் முறையாக ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றதுடன், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் நேரடி தகுதி பெற்றுள்ளது.