ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி வீரர் மரணம்

மாரடைப்பு காரணமாக குர்பக்ஸ் சிங் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி வீரர்  மரணம்
Published on

சண்டிகார்,

1968-ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியில் இடம் பிடித்த முன்கள வீரரான குர்பக்ஸ் சிங் கிரேவால் பஞ்சாப் மாநிலம் சண்டீகாரை அடுத்துள்ள சிராக்பூர் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக குர்பக்ஸ் சிங் (வயது 84) நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். மேற்கு ரெயில்வே சீனியர் விளையாட்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் மும்பை ஆக்கி சங்க செயலாளராகவும் இருந்துள்ளார். குர்பக்ஸ் சிங்கின் தம்பியான பல்பீர் சிங்கும் ஆக்கி வீரர் ஆவார். இருவரும் ஒரே ஒலிம்பிக் போட்டியில் (மெக்சிகோ) இந்திய ஆக்கி அணிக்காக ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com